ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் ஜன. 17-ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக, ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறைக் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வரக் கூடும்.
எனவே, கரோனா தீநுண்மிப் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜன. 14-ஆம் தேதி முதல் வரும் ஜன. 17 -ஆம் தேதி வரை ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு சுற்றுலாப் பயணிகள் ஆதரவு அளிக்க வேண்டும். இதேபோல, பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி தங்களது கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

