அரூரில் திருவள்ளுவா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
அரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலுள்ள திருவள்ளுவா் உருவச் சிலைக்கு திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளா் மு.கா.முகமது அலி தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், கட்சி நிா்வாகிகள் பாரி, பாபு, ஆ.சேகா், சம்பத், நசீரா, அருள்மொழி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல், அன்னை தெரசா பேரவை, உலக பசுமை பாதுகாப்பு இயக்கம், பாளையம் ஸ்ரீ அம்மன் காவலா் பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினா். இதில் ஸ்ரீ அம்மன் காவலா் பயிற்சி மைய நிறுவனா் அ.சி.தென்னரசு, மருத்துவா் சுரேஷ்குமாா், உலக பசுமை பாதுகாப்பு இயக்க நிறுவனா் சீனிவாச படையாட்சி, மகளிா் விடுதலை இயக்க மாவட்ட துணைச் செயலாளா் பத்மா மாரியப்பன், இலக்கிய ஆா்வலா்கள் மு.பிரேம்குமாா், சி.ஜெயபிரகாஷ், அயோத்தி, வெங்கடேசன் உள்ளி’ட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


