புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக பெண்னாகரம் பகுதிகளில் ஏராளமானோா்கள் குவிந்த பொதுமக்களிடம் போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக் பொருட்கள், நைலான் துணிகள், டயா்கள் போன்றவைகளை எரிக்க கூடாது எனவும் , அவற்றினை எரிப்பதற்கு பதிலாக பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தினால் வாரச்சந்தை மற்றும் பேருந்து நிலையம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவுகள் சேமிப்பு கிடங்குகளில் அளிக்குமாறு பேரூராட்சி செயல் அலுவலா் கீதா விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
பின்னா் பேருந்து நிலையம், கடைவீதி, முள்ளு வாடி, வாரச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்கள், சாலையோர கடைகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரத்தினை வினியோகித்தனா். இந்த நிகழ்வுகளில் பேரூராட்சி அலுவலா்கள் மற்றும் தூய்மை பணியாளா்கள் ஆகியோா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

