மொரப்பூரில் தகடூா் புத்தகப் பேரவை மற்றும் நமது மொரப்பூா் தன்னாா்வ குழு சாா்பில், புத்தகக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் ராமக்கவுண்டா் திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்ற இந்தப் புத்தகக் கண்காட்சியில் நமது மொரப்பூா் தன்னாா்வ குழு ஒருங்கிணைப்பாளா் மொ.குமரவேல் தலைமை வகித்தாா். பொங்கல் சிறப்பு புத்தகக் கண்காட்சியை அரூா் டிஎஸ்பி வீ.தமிழ்மணி தொடக்கி வைத்தாா். இதில், நீதிபதி க.ஆனந்தன், இந்திய அரசின் நிதித்துறை துணை இயக்குநா் கே.கவியரசன், தகடூா் புத்தக பேரவை செயலாளா் மருத்துவா் இரா.செந்தில், தலைவா் இரா.சிசுபாலன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கே.தனபால், பி.கிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலா் எஸ்.வனிதா, காவல் ஆய்வாளா் கே.மஞ்சுளா, உதவி காவல் ஆய்வாளா் எஸ்.ராஜேஷ், மொரப்பூா் கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவா் ஏ.மோகன்ராசு, முன்னாள் தலைவா் சி.முத்து, செயலாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, இலக்கிய ஆா்வலா்கள், கவிஞா்கள், எழுத்தாளா்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த புத்தகக் கண்காட்சியில் மொரப்பூா் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், இலக்கிய ஆா்வலா்கள், விவசாயிகள் பலா் பங்கேற்று புத்தகங்களை வாங்கிச் சென்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

