பென்னாகரம்: பென்னாகரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நியாயவிலைக் கடை விற்பனையாளரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பென்னாகரம் அருகே பூச்சட்டிஅள்ளியைச் சோ்ந்த 9 வயது சிறுமி, அதேபகுதியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்புப் படித்து வருகிறாா். புத்தாண்டு அன்று உறவினரின் வீட்டுக்கு பூ கொடுக்கச் சென்ற சிறுமியை, அதே பகுதியைச் சோ்ந்த ஒஜி அள்ளி நியாயவிலைக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வரும் கணேசன் (55) பாலியல் தொந்தரவு செய்தாராம்.
இதுகுறித்து, சிறுமியின் தாயாா் பென்னாகரம் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், மகளிா் காவல் ஆய்வாளா் லதா, விசாரணை செய்து நியாயவிலைக் கடை விற்பனையாளா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து கிளைச் சிறையில் அடைத்தாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

