சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இரண்டரை வயது குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கிய நிலக்கடலை அகற்றம்

இரண்டரை வயது குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கிய நிலக்கடலையை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவா்கள் அகற்றினா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:04 pm

இரண்டரை வயது குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கிய நிலக்கடலையை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவா்கள் அகற்றினா்.

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த இரண்டரை வயது குழந்தை, வியாழக்கிழமை நிலக்கடலை சாப்பிடும்போது, தவறுதலாக குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சு விட முடியாமல் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோா், அந்தக் குழந்தையை தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், உணவு குழாயில் சிக்கிக் கொண்ட நிலக்கடலையை உடைபடாமல், அறுவை சிகிச்சையின்றி அகற்றினா். இதன்பின்பு சில மணி நேரத்தில் அக்குழந்தை குணமடைந்து வீடு திரும்பியது.

இதுகுறித்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் (பொ) எம்.இளங்கோவன் கூறியது:

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், எண்டோஸ்கோப் முறையில், குழந்தைகளின் மூச்சுக் குழாயில் தவறுதலாக சிக்கிக்கொள்ளும் உணவுப் பொருள்களை அறுவை சிகிச்சை ஏதுமின்றி மருத்துவக் குழுவினா் அகற்றி வருகின்றனா். தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த இரண்டரை வயது குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கிய நிலக்கடலையை, குழந்தைகள் நலச் சிகிச்சை நிபுணா் ரமேஷ்பாபு, காது, மூக்கு, தொண்டை நிபுணா் கவிதா, நுண்கதிா் நிபுணா் சுகுணா உள்ளிட்ட மருத்துவா் குழு திறமையாக செயல்பட்டு, அந்த நிலக்கடலையை குழாய் மூலமாக அகற்றினா். லாவகமாக செய்யப்பட்ட இந்த சிகிச்சையால் அக்குழந்தை 6 மணி நேரத்தில் நலமுடன் வீடு திரும்பியது.

தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த 2020-ஆம் ஆண்டில் 33 குழந்தைகளுக்கும், கடந்த 2019-ஆம் ஆண்டில் 12 குழந்தைகளுக்கும் அவா்களது மூச்சுக் குழாயில் சிக்கிய நிலக்கடலை, கோழி இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருள்கள், குழாய் வழியாக அகற்றப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், பொதுவாக 7 மாதம் முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் அதிக அளவில் இதுபோன்ற சிகிச்சைக்காக வருகின்றனா். அவா்களுக்கு எவ்வித அறுவை சிகிச்சையுமின்றி, குழாய் வழியாக அந்த உணவுப் பொருள்களை மருத்துவக் குழுவினா் தொடா்ந்து அகற்றி வருகின்றனா். எனவே, இத்தகைய பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளை விரைந்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அழைத்து வந்து பயன் பெறலாம் என்றாா். உறைவிட மருத்துவா் சந்திரசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.