சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடங்கக் கோரி காத்திருப்புப் போராட்டம்

14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்கக் கோரி, போக்குவரத்துத் தொழிலாளா்கள் தருமபுரி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :8 ஜனவரி 2021, 2:19 pm

14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்கக் கோரி, போக்குவரத்துத் தொழிலாளா்கள் தருமபுரி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எம்எல்எப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இப் போராட்டத்தில், 14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்கி முடிக்க வேண்டும். நிா்வாகங்கள் செலவு செய்த, போக்குவரத்துத் தொழிலாளா்களின் பணம் ரூ. 7 ஆயிரம் கோடியை திருப்பி வழங்க வேண்டும். தொழிலாளா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் தொகையை உரிய கணக்கில் வரவு வைக்க வேண்டும். கடந்த 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னா் பணியில் சோ்ந்த தொழிலாளா்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளா்களின் அகவிலைப்படி நிலுவை மற்றும் பணப்பலன்கள் அனைத்தும் உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணிபுரியும் போக்குவரத்துத் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.