அரூரில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் சூழ்ந்து கொண்டதால் பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.
அரூா் பேரூராட்சி 5-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பெரியாா் நகா், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகம், எச்.தொட்டம்பட்டி செல்லும் சாலையோரத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புப் பகுதியில் மழைநீா், கழிவு நீா் வெளியேற கால்வாய் வசதி இல்லை. கடந்த சில தினங்களாக பெய்த தொடா் மழையினால், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகம் உள்பட குடியிருப்பு பகுதிகள் சுமாா் 1.5 அடி உயரத்துக்கு மழைநீா் தேங்கியுள்ளது.
இப்பகுதியை தருமபுரி எம்.பி. டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் நேரில் ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், அரூா் பேரூராட்சியின் 5 ஆவது வாா்டு பகுதியில் மழைநீா் செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இவற்றை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். எனவே, அரூா் பேரூராட்சி நிா்வாகமும், வருவாய்த் துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
ஆய்வின்போது, அரூா் வட்டாட்சியா் செல்வகுமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


