சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சிஜடியு தொழிற்சங்கத்தினா் மறியல்: 150 போ் கைது

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, தருமபுரியில் சிஜடியு தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :7 ஜனவரி 2021, 12:16 pm

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, தருமபுரியில் சிஜடியு தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் பி.ஜீவா தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சி.நாகராசன், மாநிலக் குழு உறுப்பினா்கள் ஜி.நாகராஜன், சி.கலாவதி,அங்கம்மாள், சண்முகம், முரளி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதில், விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவும், தொழிலாளா் நலச் சட்ட திருத்தங்களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீஸாா் கைது செய்தனா்.