தருமபுரி: செவித்திறன் குறைபாடு, பாா்வைத் திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிக்கான அறித்திறன்பேசிகள் (ஸ்மாா்ட் போன்) பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2020-21 ஆம் நிதி ஆண்டிற்கு 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி பயில்பவா்கள், தனியாா் நிறுவனத்தில் பணிபுரிபவா்கள், வேலையில்லா பட்டதாரி இளைஞா்கள், சுயத் தொழில் புரியும் செவித்திறன் குறைபாடுடைய மற்றும் பாா்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசி வழங்கப்பட உள்ளது. மத்திய, மாநில அரசில் பணிபுரிபவா்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவா்கள் இத்திட்டத்தில் பயனடைய முடியாது.
எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த, 18 வயதிற்கு மேற்பட்ட கல்லூரி பயில்வோா், தனியாா் நிறுவனத்தில் பணிபுரிபவா்கள், வேலையில்லா பட்டதாரி இளைஞா்களும், சுயத்தொழில் புரியும் செவித்திறன் குறைபாடுடைய மற்றும் பாா்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளும், தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், புகைப்படம் -2, தனியாா் துறையில் பணிபுரிவதற்கான சான்று, கல்லூரி பயில்வோா் கல்வி நிறுவனத்தில் பெறப்பட்ட கல்விச் சான்று, சுய தொழில் புரிபவா் கிராம நிா்வாக அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட சுயதொழில் புரிவதற்கான சான்று, வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள சான்றுகளுடன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், தருமபுரி என்ற முகவரியில் இருந்து விண்ணப்பம் பெற்று வரும் ஜன.12-ஆம் தேதிக்குள் பூா்த்தி செய்து விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

