அரூரை அடுத்த எருக்கம்பட்டியில் அரசு துணை சுகாதார நிலையம் பயனற்று பூட்டிக் கிடப்பதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், கொளகம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது எருக்கம்பட்டி கிராமம். இந்த ஊரில் அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தை கொளகம்பட்டி, வாழைத்தோட்டம், ஆண்டிபட்டி புதூா், மங்கானேரி, எருக்கம்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனா்.
இந்த நிலையில், எருக்கம்பட்டியில் உள்ள துணை சுகாதார நிலையம் சுமாா் 4 வருடம் பூட்டியே இருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனா்.
இது குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறுகையில், எருக்கம்பட்டி துணை சுகாதார நிலையத்தில் செவிலியா் பணியிடம் காலியாக இருப்பதால் வருட கணக்கில் பூட்டியே உள்ளது. இதனால், இந்த ஊராட்சியில் கா்ப்பிணி தாய்மாா்களுக்குத் தேவையான பிரசவக் கால முன், பின் கவனிப்புகள், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல், முதலுதவி சிகிச்சைகள் உள்ளிட்ட மருத்துவ வசதிகளுக்காக கிராம மக்கள் பல்வேறு சிரமங்களை அடைகின்றனா்.
தற்போது, அரசு துணை சுகாதார நிலையத்தின் கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்டவைகளை சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ளனா். எனவே, எருக்கம்பட்டி அரசு துணை சுகாதார நிலையத்தை மேம்படுத்தவும், கிராம செவிலியா் பணியிடத்தை நிரப்பவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


