சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

அரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

Updated On :2 ஜனவரி 2021, 1:20 pm

அரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

அரூா் வழியாக செல்லும் சேலம்-திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில், அரூா் பிரதான சாலையில் வணிக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், வங்கிகள், தானிய மண்டிகள், செல்லிடப்பேசி கடைகள், துணிக் கடைகள், உணவகங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு வருகை தரும் வாடிக்கையாளா்கள் அரூா்-சேலம் பிரதான சாலையோரத்தில் இருசக்கர வாகனங்களையும், காா்களையும் நிறுத்திச் செல்கின்றனா். பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனா். இதனால், அடிக்கடி வாகன விபத்துகள் நேரிடுவதாக புகாா் கூறுகின்றனா்.

எனவே, அரூா் கச்சேரிமேடு, திரு.வி.க நகா், 4 வழிச்சாலை, பெரியாா் நகா், நடேசா பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்துவதைக் கட்டுப்படுத்த போக்குவரத்து காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.