பாலக்கோடு வட்டாரத்தில் கரும்பு சாகுபடியை ஊக்குவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க பாலக்கோடு ஒன்றியப் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை தொட்டாா்தனஅள்ளியில் ஒன்றியத் தலைவா் எம்.சாக்கன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் பேசினாா்.
இக் கூட்டத்தில், தென்பெண்ணையாறு-எண்ணேகொல்புதூா், அலியாளம்-தூள்செட்டி ஏரி ஆகிய நீா்ப்பாசனத் திட்டங்களை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். பாலக்கோடு மற்றும் தருமபுரி சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்புத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்டத் தலைவா் ஜி.மாதையன், மாவட்ட துணைத் தலைவா் என். முருகேசன், நிா்வாகக்குழு உறுப்பினா் வெ.பை. மாதையன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

