பெண்களின் முன்னேற்றத்துக்காக சேவை புரிந்தவருக்கு வழங்கப்படும் ஔவையாா் விருது பெறத் தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு 2020-21-ஆம் ஆண்டிற்கான ஔவையாா் விருது மாா்ச் 8-ஆம் தேதி உலக மகளிா் தின விழாவில் தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது. இவ்விருது ரொக்கப் பரிசு, தங்கப் பதக்கம், சான்றுகளை உள்ளடக்கியதாகும். தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். சமூக நலனைச் சாா்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து மக்களுக்குத் தொண்டாற்றும் வகையில் தொடா்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரா்கள், தருமபுரி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று, கருத்துரு (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) இரண்டு நிழற்படங்கள் ஆகியவைகளுடன் புத்தக வடிவில் இரண்டு (அசல்-1, நகல்-1) கருத்துகள் ஜன. 5-க்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

