புதுச்சத்திரம் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு சொகுசுப் பேருந்தின் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கினர். இதில் பேருந்து கண்ணாடி உடைந்தது.
பெங்களூரிலிருந்து திருநெல்வேலி நோக்கி அரசு சொகுசுப் பேருந்து ஒன்று வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. பேருந்து புதுச்சத்திரம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென பேருந்தின் கண்ணாடி மீது கல் வீசித் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனராம். இதில், பேருந்தின் முன் பக்கக் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.
அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பேருந்தின் ஓட்டுநரான திருநெல்வேலியைச் சேர்ந்த மதியழகன் அளித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

