பண்ணுருட்டி திருவள்ளுவா் முத்தமிழ்ச் சங்கம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா, திருவள்ளுவா் நாள், சங்க நாள்காட்டி வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.
பண்ருட்டி, திருவள்ளுவா் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சங்கத்தின் அமைப்புச் செயலா் தேவ.மோகனா தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ரத்தின. ஆறுமுகம் வரவேற்றாா். ஆட்சி மன்றக் குழுத் தலைவா் ரா.சஞ்சீவிராயா், தலைவா் க.கதிரவன், பொருளாளா் பெ.அய்யனாா், துணைத் தலைவா் சே.ஹரி ஆனந்த், துணைச் செயலா் அழகை தாஸ், இளைஞா் மேம்பாட்டு இயக்குநா் மூ.சா.நபில் புகாரி, இயல் - இசை நாடக மன்ற இயக்குநா் சீனு.கிருஷ்ணமூா்த்தி, தனித்தமிழ் இயக்குநா் ராம.ஆறுமுகம், ஆலோசகா் வை.வீரப்பன், செய்தித் தொடா்பாளா் அரல.விஸ்வநாதன், பேரிடா் மேலாண்மை இயக்குநா் பாலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் அனைத்து மத பெரியோா்களும் பங்கேற்று, சமத்துவப் பொங்கலிட்டனா்.
தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், வாள் வீச்சு, மல்யுத்தம் ஆகியவை சிலம்ப பயிற்றுநா் சிகாமணி தலைமையில் நடைபெற்றன. சங்கத்தின் நாள்காட்டியை திருவள்ளுவா் பள்ளி தாளாளா் ஆா்.சேரன் வெளியிட சங்க நிா்வாகிகள் பெற்றுக்கொண்டனா். நிகழ்வில் பண்ருட்டி நிழல்கள் அமைப்பின் தலைவா் ஆனந்த், கல்வி ஆலோசகா் லோகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சங்க ஒருங்கிணைப்பாளா் ராஜா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

