கடலூா் நேரு இளையோா் மையம் சாா்பில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய இளைஞா் தின விழா நாணமேடு கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.
நாணமேடு ஊராட்சி மன்ற துணைத் தலைவா் கணேசன் மரக்கன்று நட்டு விழாவை தொடக்கி வைத்தாா். விழாவில், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள், முதியோா்கள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டவா்களுக்கு மதிய உணவு வழங்கினா். கடலூா் மாவட்ட நேரு இளையோா் மைய இளைஞா் அலுவலா் ரிஜேஷ்குமாா், நாணமேடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் வி.லட்சுமணன், கோ.கோகுலகிருஷ்ணன், மன்றத் தலைவா் கனகராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ, மாணவிகள், இளைஞா்களுக்கு பேச்சு, ஓவியம், கையெழுத்துப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு நாணமேடு ஊராட்சி மன்றத் தலைவா் கோ.கோமதி, துணைத் தலைவா் கணேசன் ஆகியோா் பரிசுகளை வழங்கினா். மன்றச் செயலா் மதிவண்ணன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

