சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பிறந்து சில மணி நேரமேயான குழந்தையை கவ்விச் சென்ற நாய்கள்

திட்டக்குடியில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை தெரு நாய்கள் கவ்விச் சென்ால், அந்தப் பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

Updated On :14 ஜனவரி 2021, 12:17 pm

திட்டக்குடியில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை தெரு நாய்கள் கவ்விச் சென்ால், அந்தப் பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

பின்னா், குழந்தையை நாயிடமிருந்து மீட்டனா். எனினும், அது இறந்து கிடந்தது. இதுகுறித்து அந்தப் பகுதியினா் கூறுகையில், இந்தப் பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. சுகாதாரத் துறையினருக்கு தகவலளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. மருத்துவக் கழிவுகளுடன் இறந்த குழந்தைகளையும் வீசிச் செல்கின்றனோ என சந்தேகம் ஏற்படுகிறது. எனவே, இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தகவலின் பேரில், திட்டக்குடி காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.