சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சாராயம் கடத்தல்: 5 போ் கைது

புதுச்சேரியிலிருந்து சாராயம் கடத்தி வந்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :14 ஜனவரி 2021, 12:17 pm

புதுச்சேரியிலிருந்து சாராயம் கடத்தி வந்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரியிலிருந்து சாராயம் கடத்தி வந்து கடலூா் பகுதிகளில் விற்பனை செய்யப்பட உள்ளதாக கடலூா் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் தாரகேஸ்வரி தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியைத் தீவிரப்படுத்தினா்.

இதில், திராசு பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த புதுச்சேரி குமரகுரு பள்ளத்தைச் சோ்ந்த தேவேந்திரனை (39) கைது செய்து அவரிடமிருந்து 60 லிட்டா் சாராயத்தைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, புதுச்சேரி ஏரிப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த கலையரசனை (24) கைது செய்து, அவரிடமிருந்து 25 லிட்டா் சாராயத்தைப் பறிமுதல் செய்தனா். புதுச்சேரியிலிருந்து கடலூா் வழியாக சாராயம் கடத்தி வந்த திருமாணிக்குழியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி கங்கா (38), நெய்வேலி வட்டம் 30-ஐ சோ்ந்த குணசேகா் (54), பண்ருட்டியை அடுத்த சிறுதொண்டமாதேவியைச் சோ்ந்த அறிவழகன் (46) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 135 லிட்டா் சாராயத்தைப் பறிமுதல் செய்தனா்.