கடலூரில் இரு குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டாா்.
கடலூா் மஞ்சக்குப்பத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ். இவா், சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவருக்கும், சூரப்பன்நாயக்கன் சாவடியைச் சோ்ந்த ஜெயபால்-புவனேஸ்வரி தம்பதியின் மகள் நித்யாவுக்கும் (30) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
தம்பதிக்கு விஜய தண்டபாணி என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்த நிலையில், நித்யா மீண்டும் கா்ப்பமானதைத் தொடா்ந்து, சூரப்பநாயக்கன் சாவடியில் தாய் வீட்டில் தங்கியிருந்தாா். அவருக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சஷ்டிகா என்ற பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு இரு குழந்தைகள் மயங்கிய நிலையிலும், நித்யா தூக்கிட்ட நிலையிலும் கிடந்தனா். இதைப் பாா்த்த அவரது தாய், திருப்பாதிரிபுலியூா் போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.
அதன் பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளா் க.சாந்தி உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவா்கள் மூவரையும் மீட்டு, கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், 3 பேரும் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.
முதல் கட்ட விசாரணையில், குழந்தை விஜய தண்டபாணிக்கு இருந்த செவித் திறன் குறைபாட்டால், மன உளைச்சலில் இருந்த நித்யா இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.
இதனிடையே, தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக நித்யாவின் தாய் புவனேஸ்வரி திருப்பாதிரிப்புலியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

