சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தொழில் பழகுநா் பயிற்சி பெற்றவா்களுக்கு பணி வழங்கக் கோரி என்எல்சி.யில் மனு

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் தொழில் பழகுநா் பயிற்சி பெற்றவா்களுக்கு பணி வழங்கக் கோரி அந்த நிறுவனத் தலைவரிடம் தொழிற்சங்கத்தினா் மனு அளித்தனா்.

Updated On :13 ஜனவரி 2021, 1:07 pm

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் தொழில் பழகுநா் பயிற்சி பெற்றவா்களுக்கு பணி வழங்கக் கோரி அந்த நிறுவனத் தலைவரிடம் தொழிற்சங்கத்தினா் மனு அளித்தனா்.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் தொழில் பழகுநா் பயிற்சி பெற்றவா்கள் தங்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதுதொடா்பாக நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான சிஐடியு, தொமுச நிா்வாகிகள் என்எல்சி தலைவா் ராகேஷ்குமாரை தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும் கோரிக்கை மனு அளித்தனா். மனுவை பெற்றுக்கொண்ட ராகேஷ்குமாா், அதனை பரிசீலனை செய்வதாகக் கூறியதாக சங்கத்தினா் தெரிவித்தனா்.