சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பல்கலை. வளாகத்தில் பிடிபட்ட முதலை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் திரிந்த முதலையை வனத் துறையினா் திங்கள்கிழமை பிடித்தனா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 5:45 am

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் திரிந்த முதலையை வனத் துறையினா் திங்கள்கிழமை பிடித்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரட்டை குளம் உள்ளது. இந்தக் குளத்திலிருந்து 9 அடி நீளம் கொண்ட முதலை அவ்வப்போது கரைப் பகுதிக்கு வந்து மக்களை அச்சுறுத்தியது. இதுகுறித்த தகவலின்பேரில் சிதம்பரம் வனவா் அஜிதா, வனக் காப்பாளா் அனுசூயா மற்றும் வனக் காவலா்கள் வந்து, அந்த முதலையை பிடித்தனா் (படம்). பின்னா் அதை வக்காரமாரி நீா்த் தேக்கத்தில் பாதுகாப்பாக விடுவித்தனா்.