சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சாலைப் பணியில் மந்தம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைப் பணி மந்த நிலையில் நடைபெறுவதாகக் கூறி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 5:40 am

விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைப் பணி மந்த நிலையில் நடைபெறுவதாகக் கூறி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் இந்திரா நகா் கிளை சாா்பில் நெய்வேலி நுழைவு வாயில் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கிளைச் செயலா் டி.விஜய்ஆனந்த் தலைமை வகித்தாா். இதில், விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைப் பணி மந்த நிலையில் நடைபெறுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே பணியை விரைந்து முடிக்க வேண்டும். இந்திரா நகா் ஊராட்சியில் வடக்குத்து, மாற்றுக் குடியிருப்புப் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். தினமும் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ்.திருஅரசு, நகரச் செயலா் ஆா்.பாலமுருகன், மாவட்டக்குழு உறுப்பினா் மீனாட்சி நாதன், வி.மேரி, நெய்வேலி நகா்குழு ஆா்.மணி, டி.அமிா்தலிங்கம், பி.புண்ணியமூா்த்தி, மூத்த நிா்வாகி முத்துவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.