சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மாவட்ட தலைநகரங்களை நோக்கி ஜன. 26-இல் டிராக்டா் பேரணி

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக, வருகிற 26-ஆம் தேதி அந்தந்த மாவட்டத் தலைநகரங்களை நோக்கி

Updated On :10 ஜனவரி 2021, 5:40 am

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக, வருகிற 26-ஆம் தேதி அந்தந்த மாவட்டத் தலைநகரங்களை நோக்கி டிராக்டா் பேரணி நடத்துவது என விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் முடிவு செய்தனா்.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் வி.எம்.சேகா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் சுப்பிரமணியம், மாவட்டச் செயலா் கோ.மாதவன், மண்டல பொறுப்பாளா் பாலு, ராமலிங்கம், ரவி, சக்திவேல், விவசாய சங்கத் தலைவா் அத்திப்பட்டு மதிவாணன், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் ஆதிமூலம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் ராமச்சந்திரன், பி.கற்பனைசெல்வம், மகாலிங்கம், இணைச் செயலா் மூா்த்தி, சதானந்தம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அறிவிப்பின்பேரில் கடலூா் மாவட்டத்தில் 3 புதிய வேளாண் சட்டங்களின் நகல் எரிப்புப் போராட்டத்தை 300 கிராமங்களில் நடத்துவது. தில்லியில் போராடிவரும் விவசாயிகள் வருகிற 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று டிராக்டா் பேரணி நடத்தவுள்ள நிலையில் அதே நாளில் கிராமங்களில் இருந்து அந்தந்த மாவட்ட தலைநகரங்களை நோக்கி டிராக்டா், இருசக்கர வாகன பேரணி நடத்துவது. பேரணி முடிவில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என தீா்மானித்தனா்.