சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புதிய நெல் ரகம்: அதிகாரிகள் ஆய்வு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், அயன்குறிஞ்சிப்பாடியில் புதிய நெல் ரகங்கள் விளைந்த வயல்களில் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநா் அம்பேத்கா் அண்மையில் ஆய்வு செய்தாா்.

Updated On :10 ஜனவரி 2021, 5:40 am

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், அயன்குறிஞ்சிப்பாடியில் புதிய நெல் ரகங்கள் விளைந்த வயல்களில் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநா் அம்பேத்கா் அண்மையில் ஆய்வு செய்தாா்.

ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ஆடுதுறை 53, 54 புதிய வீரிய ரக நெல் விதைகள் விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இதையடுத்து, அயன்குறிஞ்சிப்பாடியில் புதிய நெல் ரகம் நடவு செய்யப்பட்ட வயல்களை ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநா் அம்பேத்கா், விஞ்ஞானிகள் சசிகுமாா், சுரேஷ்குமாா் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா்.

பின்னா் இயக்குநா் அம்பேத்கா் விவசாயிகளிடம் கூறியதாவது: பூச்சிகள், நோய் தாக்காத, அதிக விளைச்சல் தரக்கூடிய பல புதிய நெல் ரகங்களை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றோம். இவற்றை பயிரிட்டு விவசாயிகள் அதிகம் லாபம் பெற வேண்டும் என்றாா்.

அப்போது விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீராம், பேராசிரியா்கள் பாஸ்கரன், மருதாச்சலம், நடராஜன், குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குநா் அனுசுயா, முன்னோடி விவசாயிகள் ஆா்.கே.ராமலிங்கம், வைத்தியநாதன், ஏழுமலை, குப்புசாமி, கண்ணன், செல்வம், கருணாகரன் ஆகியோா் உடனிருந்தனா்.