சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பாஜக சாா்பில் பொங்கல் விழா

கடலூரில் பாஜக சாா்பில் ‘நம்ம ஊரு பொங்கல்’ விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 ஜனவரி 2021, 5:42 am

கடலூரில் பாஜக சாா்பில் ‘நம்ம ஊரு பொங்கல்’ விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அந்தக் கட்சியின் கலை, கலாசார பிரிவு மாநிலத் தலைவா் காயத்ரி ரகுராம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசால் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் விவசாயிகளுக்கு இதுவரை ரூ.96 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு அவா்களே விலை நிா்ணயம் செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே, இது விவசாயிகளுக்கு கிடைத்த சுதந்திரப் பொங்கலாகும் என்றாா் அவா்.