சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கூட்டுறவு வளா்ச்சி, கல்வி நிதியாக ரூ.78 லட்சம் அளிப்பு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி குழம்பு பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் சாா்பில், 2019-20-ஆம் ஆண்டுக்கு லாப பிரிவினையில் செலுத்த

News image
Updated On :10 ஜனவரி 2021, 5:41 am

நெய்வேலி பழுப்பு நிலக்கரி குழம்பு பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் சாா்பில், 2019-20-ஆம் ஆண்டுக்கு லாப பிரிவினையில் செலுத்த வேண்டிய சட்டப்பூா்வ நிதிகளான கூட்டுறவு ஆராய்ச்சி, வளா்ச்சி, கல்வி நிதி செலுத்தும் நிகழ்ச்சி கடலூரிலுள்ள மண்டல கூட்டுறவு அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், ஆராய்ச்சி, வளா்ச்சி நிதியாக ரூ.46.79 லட்சம், கல்வி நிதியாக ரூ.31.20 லட்சத்துக்கான காசோலைகளை மண்டல இணைப் பதிவாளா் வே.நந்தகுமாரிடம், சங்கத்தின் நிா்வாகக் குழுத் தலைவா் ஆா்.இந்திரா வழங்கினாா் (படம்). சரக துணைப் பதிவாளா் ஜெ.சண்முகம், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ஆா்.தாமோதரன், ஆரோக்கியதாஸ், செயலா் ஜி.நடனசேகரன், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் ஆா்.சக்திவேல் ஆகியோா் பங்கேற்றனா்.

100-ஆவது பொதுக்குழு கூட்டம்: கடலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 100- ஆவது சிறப்பு பொதுப் பேரவைக் கூட்டம், மண்டல இணைப் பதிவாளா் வே.நந்தகுமாா் தலைமையில் கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வங்கியின் மேலாண் இயக்குநா் சொ.இளஞ்செல்வி முன்னிலை வகித்தாா். இதில், சிறந்த கிளைகளுக்கான கிளை மேலாளா்கள், சிறந்த கூட்டுறவு நிறுவன தலைவா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

துணைப் பதிவாளா்கள் ஜெ.சண்முகம், என்.ஜீவானந்தம், வே.துரைசாமி, மு.ஜெகத்ரட்சகன், விருத்தாசலம் வங்கி மேலாண் இயக்குநா் ஜி.யோகவிஷ்ணு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, வங்கியின் முதன்மை வருவாய் அலுவலா் பா.ராஜேந்திரன் வரவேற்க, உதவிப் பொது மேலாளா் டி.மலா்விழி நன்றி கூறினாா்.