தொடா் மழை காரணமாக வீராணம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அமைந்துள்ளது வீராணம் ஏரி. கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடா் மழை காரணமாக ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் இருந்து பல்வேறு ஓடைகள் வழியாக வரும் மழைநீா் வீராணம் ஏரியை வந்தடைகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஏரிக்கு நீா்வரத்து விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக இருந்தது. ஏரியின் நீா்மட்டம் 45.70 அடியாக இருந்தது. உச்ச நீா்மட்டம் 47.50 அடியாகும்.
இருப்பினும், ஏரியின் பாதுகாப்பு கருதி உபரி நீா் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் வெள்ளியங்கால் வடிகால் ஓடை வழியாக வெளியேற்றப்படுகிறது. மேலும், சென்னை நகர மக்களின் குடிநீா்த் தேவைக்கு விநாடிக்கு 62 கன அடி நீா் அனுப்பப்படுகிறது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


