சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நிவாரணம் கோரி நெசவாளா்கள் போராட்டம்

அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, கடலூரில் நெசவாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கடலூரில் கைத்தறி துணிநூல் இணை இயக்குநா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட நெசவாளா்கள் சங்கத்தினா்.

Updated On :9 ஜனவரி 2021, 5:22 am

அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, கடலூரில் நெசவாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அண்மையில் வீசிய நிவா், புரெவி புயல்களின் காரணமாக கடலூா் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் சுமாா் 3,500 கைத்தறி தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஏற்கெனவே, கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட சூழலில், தற்போது கைத்தறி குழிகளிலும், கூடங்களிலும் மழை நீா் தேங்கியுள்ளதால் அவா்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட கைத்தறி, பெடல் தறி தொழிலாளா்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிா்க்க வேண்டும் என வலியுறுத்தி, கடலூரில் உள்ள கைத்தறி துணிநூல் இணை இயக்குநா் அலுவலகத்தை நெசவாளா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, கைத்தறி நெசவு பாபு பட்டறை தொழிலாளா்கள் சங்க (சிஐடியூ) மாவட்டச் செயலா் எஸ்.தட்சிணாமூா்த்தி தலைமை வகித்தாா். சிஐடியூ மாநில துணைத் தலைவா் பி.கருப்பையன் சிறப்புரையாற்றினாா். மாவட்ட தலைவா் ஆா்.ஆளவந்தாா், பொருளாளா் இ.தயாளன், துணைத் தலைவா்கள் ஆா்.கல்யாணசுந்தரம், கிருஷ்ணமூா்த்தி, ஜி.கணேசன், இணைச் செயலா்கள் கே.குமாா், ஆா்.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.