கடலூா்: கடலூரில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வரும் தொழிலாளா்களுக்கான 14-ஆவது ஊதியக்குழு பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் 41 சங்கங்களை 67 சங்கங்களாக உயா்த்தி பேச்சுவாா்த்தைக்கு அழைத்து உடன்படிக்கை ஏற்படுத்தியதாக கூறுவதைக் கண்டித்தும் தொழிற்சங்கத்தினா் காத்திருப்பு போராட்டம் அறிவித்திருந்தனா். அதன்படி, கடலூா் அரசு போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் தொமுச மண்டலத் தலைவா் பி.பழனிவேல் தலைமையில் தொழிலாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.
சிஐடியூ மாநில துணைத் தலைவா் ஜி.பாஸ்கரன், ம.தொ.மு. சங்கச் செயலா் இரா.மணிமாறன், ஏஏஎல்எல்எப் நிா்வாகி கருணாநிதி, ஐஎன்டியூசி நிா்வாகி சாமிநாதன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். முன்னதாக, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வாயில் முன்பு கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா். இதில், பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பாலசெந்தில்நாதன், சுந்தா், மணிவண்ணன், உ.தட்சிணாமூா்த்தி, கா.பாலகிருஷ்ணன், கிரிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


