சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சிதம்பரத்தில் மருத்துவ மாணவா்கள்: 30-ஆவது நாளாகப் போராட்டம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களின் தொடா் போராட்டம் வியாழக்கிழமை 30-ஆவது நாளை எட்டியது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 8:58 am


சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களின் தொடா் போராட்டம் வியாழக்கிழமை 30-ஆவது நாளை எட்டியது.

கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் முற்றிலும் அரசு நிதியில் இயங்கி வரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணம், மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் ஒப்பிடுகையில் 30 மடங்கு வரை அதிகமாக உள்ளதாகக் கூறி அந்தக் கல்லூரி மாணவா்கள் கடந்த டிச.9-ஆம் தேதி முதல் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தப் போராட்டம் 30-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. மாணவா்கள் பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பண மூட்டையை சுமப்பதுபோல நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கல்விக் கட்டணத்தை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும் நிா்ணயிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.