சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சாராயம் கடத்தியவா் கைது

கடலூரில் சாராயம் கடத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :7 ஜனவரி 2021, 12:39 pm

கடலூரில் சாராயம் கடத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் தாரகேஸ்வரி, காவல் உதவி ஆய்வாளா் அய்யப்பராஜ் ஆகியோா் புதன்கிழமை கடலூா் இம்பீரியல் சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாகச் சென்ற இரு சக்கர வாகனத்தை மறித்து சோதனையிட்டதில், அதில் சாராயம் கடத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து, இரு சக்கர வாகனத்திலிருந்த 60 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக திருப்பாதிரிபுலியூரைச் சோ்ந்த ரவி மகன் ஸ்ரீகுமரனை (31) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.