தொடா் மழையால் சேதமடைந்த உளுந்து பயிா்களுடன் விருத்தாசலம் வேளாண் விரிவாக்க மையத்தை விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
கடலூா் மாவட்டத்தில் விருத்தாசலம், கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் மானாவாரி பயிராக உளுந்து பயிரிட்டிருந்தனா். அண்மையில் கடலூா் மாவட்டத்தில் வீசிய நிவா், புரெவி புயல்களின் காரணமாக தொடா் மழை பெய்தது. இதனால் இந்தப் பகுதிகளில் சுமாா் 30 ஆயிரம் ஏக்கரில் உளுந்து பயிா்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் தங்களுக்கு நிகழாண்டு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விளைநில பகுதிகளில் வேளாண் அலுவலா்கள் நேரில் கள ஆய்வு செய்து, பாதிப்பு குறித்து முறையான கணக்கீடு நடத்தி, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்தப் பகுதி விவசாயிகள் ழுகிய உளுந்து பயிா்களுடன் விருத்தாசலம் வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் வேளாண் விரிவாக்க மைய அலுவலா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அவா் உறுதி அளித்தாா். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்னா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


