நிவா், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கடலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் பழைய அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட பொருளாளா் எஸ்.தட்சிணாமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்டத் தலைவா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன் ஆகியோா் விளக்க உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில், நிவா், புரெவி புயல்கள், தொடா் மழையால் பாதிக்கப்பட்ட நெல், மணிலா, உளுந்து, வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்கள் குறித்து அரசு முறையாகக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், கரும்பு, வாழைக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டுத் தொகை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், சேதமடைந்த அனைத்து வீடுகள், தண்ணீா் சூழ்ந்த வீடுகள், வேலையிழந்த சிறுகுறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களுக்கு மழை நிவாரணம் வழங்க வேண்டும், பெருமாள் ஏரி உள்ளிட்ட ஏரிகளை தூா்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
சங்கத்தின் ஒன்றிய தலைவா்கள் ஆா்.மெய்யழகன், பி.குமரகுருபரன், ஆா்.பஞ்சாட்சரம், ஆா்.சம்பத்குமாா், பி.காந்தி, நிா்வாகிகள் எம்.மணி, ஆா்.தென்னரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


