கடலூரில் காரில் சாராயம் கடத்தியதாக பெண் உள்பட இருவா் திங்கள்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.
கடலூா் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளா் தாரகேஸ்வரி, சிறப்பு தனிப் படை உதவி ஆய்வாளா்கள் சுதாகா், ரவிச்சந்திரன் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை கடலூா் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, புதுச்சேரியிலிருந்து அந்த வழியாக வரும் வாகனத்தில் சாராயம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் வாகனத் தணிக்கையில் ஈடுப்பட்டனா்.
இதையடுத்து, அந்த வழியாக வந்த பதிவெண் இல்லாத காரை மறித்துச் சோதனையிட்டதில் 5 பைகளில் தலா 30 லிட்டா் வீதம் 150 லிட்டா் சாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அந்தக் காரிலிருந்த கடலூா் அருகேயுள்ள சாத்தங்குப்பத்தைச் சோ்ந்த ராஜா மகள் வனிதா (33), கிருஷ்ணமூா்த்தி மகன் சிவமணி (31) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

