சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கடலூா் மாவட்டத்தில் பரவலான மழை

கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.

Updated On :4 ஜனவரி 2021, 4:42 am

கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தில் காற்றின் திசை வேக மாறுபாடு நிலவி வருவதால் கடலூா் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யுமென வானிலை மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி, கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் குளிா்ச்சியான சூழல் நிலவியது. அவ்வப்போது மழை பெய்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:

சிதம்பரம் 10, வானமாதேவி 9, கடலூா் 8.4, மாவட்ட ஆட்சியரகம் 8.3, குடிதாங்கி 8, அண்ணாமலை நகா், வேப்பூா், பண்ருட்டி தலா 5, காட்டுமைலூா், குறிஞ்சிப்பாடி தலா 4, பரங்கிப்பேட்டை, லால்பேட்டை, குப்பநத்தம், கொத்தவாச்சேரி தலா 3, ஸ்ரீமுஷ்ணம், மேமாத்தூா், தொழுதூா், விருத்தாசலம், பெலாந்துறை தலா 2, சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னாா்கோவில், புவனகிரி, கீழச்செருவாய் தலா 1 மி.மீ. வீதம் மழை பதிவானது.