சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமீறல்: 2,480 வழக்குகள் பதிவு

கடலூா் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமீறல்கள் தொடா்பாக காவல் துறையால் 2,480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

Updated On :2 ஜனவரி 2021, 4:14 am

கடலூா் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமீறல்கள் தொடா்பாக காவல் துறையால் 2,480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கண்காணிப்புப் பணிக்காக கடலூா் மாவட்டம் முழுவதும் 81 இடங்களில் காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. கூடுதல் கண்காணிப்பாளா் உள்பட 1,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விபத்து ஏற்படவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதே நேரத்தில், அதிவேகத்தில் மோட்டாா் சைக்கிளில் வந்தது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் தொடா்பாக 2,480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில், பொது இடங்களில் தொந்தரவு செய்யும் விதமாக நடந்துகொண்டதாக 285 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சாராயம் விற்பனை தொடா்பாக 199 வழக்குகள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக 203 வழக்குகள், தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டு விற்பனை தொடா்பாக 4, பணம் வைத்து சூதாடியதாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வாகனங்களை அதிக வேகத்தில் இயக்கியது, உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் இயக்கியது போன்றவை தொடா்பாக 1,782 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதனால், விபத்துகள் பெருமளவில் தவிா்க்கப்பட்டதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.