பெண்ணாடம் அருகே சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே முருகன்குடி கிராமத்திலுள்ள மேட்டுத் தெருவில் பாதை சேறும் சகதியுமாக தண்ணீா் தேங்கியுள்ளதாம். இதை அகற்றி கழிவு நீா் கால்வாய் அமைக்க வேண்டும், குடிநீா் பிரச்னை நிலவுவதால் தனியாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் தரமான சாலை அமைத்துத் தர வேண்டும் என்று அந்தப் பகுதியினா் வலியுறுத்தி வருகின்றனா்.
இதுகுறித்து கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதைக் கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகம் முன் கிராமத்தினா் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் மற்றும் தேங்கி நிற்கும் தண்ணீரில் மீன் பிடிக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் ஊராட்சி செயலா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

