சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பஸ் கண்ணாடி சேதம்

நெய்வேலி நகர செயலர் சக்ரவர்த்தி தலைமையில் பா.ம.க-வினர் நெய்வேலி வடக்குத்து கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பண்ருட்டி- வடலூர் தேசிய

Updated On :2 மே 2013, 6:13 pm

நெய்வேலி நகர செயலர் சக்ரவர்த்தி தலைமையில் பா.ம.க-வினர் நெய்வேலி வடக்குத்து கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பண்ருட்டி- வடலூர் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை சாலை மறியல் செய்ய முற்பட்டனர்.

அப்போது அவ்வழியே வந்க 3 அரசு பஸ்களின் கண்ணாடிகளை கல்வீசி தாக்கி சேதப்படுத்தினர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் சாலை மறியல் செய்ய முயற்சித்தவர்களையும், கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் கைது செய்தனர்.

  இதேபோன்று வடலூர் நான்குமுனை சந்திப்பில் சாலை மறியல் செய்ய முயற்சித்த 16 பா.ம.க-வினரை வடலூர் போலீசார் கைது செய்தனர். குறிஞ்சிப்பாடியில் மாவட்டச் செயலர் தர்மலிங்கம் தலைமையில் சாலை மறியல் செய்ய முயன்ற பா.ம.க.-வினர் 28 பேரை குறிஞ்சிப்பாடி போலீசார் கைதுசெய்தனர்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை: ராமதாஸ் கைதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே சிறிய சாலைமறியல் போராட்டம், கற்களை வீசி பஸ் கண்ணாடிகளை உடைத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்ற போதிலும் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.

மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்த ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டு சாலை நெடுகிலும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படவில்லை.

விருத்தாசலம்:

விருத்தாசலத்தில் புதன்கிழமை மாலை அரசு பஸ்சின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமப் பகுதிகளுக்குச் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

 விருத்தாசலம் பல் நிலையத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு மாலை 5.55 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது. அப்போது, பஸ் நிலையத்துக்குள் வந்த இளைஞர் ஒருவர் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி ஒடிவிட்டார்.  இதுகுறித்து விருத்தாசலம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 நகர பஸ்கள் நிறுத்தம்: விருத்தாசலத்திலிருந்து அதனை சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களுக்கு நகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் புதன்கிழமை பகல் நேரத்தில் 45 நகர பஸ்கள் இயக்கப்பட்டன.

கிராமப் பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமப் பகுதிகளுக்கு செல்லும் நகர பஸ்கள் மாலை 6 மணிக்கு நிறுத்தப்பட்டது. வழக்கம் போல் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறையினர் தெரிவித்தனர்.

 மேலும், சேலம், திருச்சி உள்ளிட்ட நீண்ட தூரம் செல்லும் பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.