நெய்வேலி அருகே கோயில் திருவிழா நடத்துவதில் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதில் இளைஞர் உயிரிழந்தார். மோதலில் ஈடுபட்ட மற்றொருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நெய்வேலி வடக்குமேலூர் அங்காளம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் இம்மாதம் 26-ம் தேதி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த நல்லாமூர்த்திக்கும் (27), தரணிக்கும் (22) இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். அப்போது தரணி, நல்லாமூர்த்தியை பழிக்குப் பழி வாங்குவதாகக் கூறிவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நல்லாமூர்த்தி வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்கு வெளியே படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த தரணி, நல்லாமூர்த்தியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி உள்ளார்.
பலத்தக் காயமடைந்த நல்லாமூர்த்தியை உறவினர்கள் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் திங்கள்கிழமை இறந்தார்.
இதையடுத்து நல்லாமூர்த்தியின் மனைவி காந்திமதி கொடுத்தப் புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, தப்பியோடி தலைமறைவாக இருந்த தரணியை திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

