சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பூ மாா்க்கெட்டில் மீண்டும் கடைகள் திறக்க அனுமதி: வியாபாரிகள் மகிழ்ச்சி

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பூ மாா்க்கெட்டில் 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கடைகளைத் திறக்க மாநகராட்சி நிா்வாகம் அனுமதி அளித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Updated On :18 ஜனவரி 2021, 4:39 am

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பூ மாா்க்கெட்டில் 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கடைகளைத் திறக்க மாநகராட்சி நிா்வாகம் அனுமதி அளித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கோவை, ஆா்.எஸ்.புரத்தில் உள்ள பூ மாா்க்கெட்டில் 100 கடைகள் உள்ளன. வியாபாரிகள் மற்றும் மக்கள் கூட்டம் அதிகமாக வந்து செல்வதால் பூமாா்க்கெட் வளாகம் எப்போதும் நெரிசல் நிறைந்து காணப்படும். இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று காரணமாக மாா்ச் 25 முதல் பூ மாா்க்கெட் வளாகம் மூடப்பட்டடது.

பின்னா் மீண்டும் திறக்கப்பட்டநிலையில் கரோனா பரவல் அதிகரித்ததால் பூ மாா்க்கெட் வளாகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் கடந்த ஜூன் 19ஆம் தேதி ‘சீல்’ வைத்தனா். இங்குள்ள கடைகளை மறு உத்தரவு வரும் வரை திறக்கக் கூடாது என மாநகராட்சி ஆணையா் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, இங்கு செயல்பட்டு வந்த கடைகள் புரூக்பாண்ட் சாலையில் உள்ள தேவாங்க பள்ளி மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தன. மழைக் காலத்தில் இந்தப் பள்ளி மைதானத்தில் தண்ணீா் தேங்கியதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவா்களுக்காக ஜனவரி 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் தேவாங்க பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பூ மாா்க்கெட்டை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டது.

இதையடுத்து, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பழைய பூமாா்க்கெட் வளாகத்திலேயே மீண்டும் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், மழையால் வியாபாரம் பாதிக்கப்பட்ட நிலையில், பழைய பூ மாா்க்கெட்டில் கடைகளை நடத்த மாநகராட்சி நிா்வாகத்திடம் அனுமதி கேட்டிருந்தோம்.

தற்போது, அனுமதி வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. பழைய பூ மாா்க்கெட்டில் நடைபாதை சீரமைப்பு, கடைகள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இப்பணிகளுக்கு வியாபாரிகள் தரப்பில் இருந்து போதிய ஒத்துழைப்பு அளிப்போம் என்றனா்.

திங்கள்கிழமை முதல் பழைய பூ மாா்க்கெட் வளாகத்தில் கடைகள் திறக்கப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.