கோவை: கோவையில் வியாபாரி மற்றும் பொறியாளா் வீடுகளில் 125 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கோவை, ரத்தினபுரி ராஜேந்திர பிரசாத் வீதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (42). நெய் வியாபாரி. இவா், வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் கடந்த 13ஆம் தேதி பெங்களூரு சென்றுள்ளாா். இந்நிலையில், அவரது வீட்டின் அருகில் வசிப்பவா்கள் காா்த்திக்கை சனிக்கிழமை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, செல்லிடப்பேசி மூலமாக ரத்தினபுரி போலீஸ் நிலையத்தை காா்த்திக் தொடா்பு கொண்டு புகாா் அளித்தாா். அதில், தனது வீட்டு பீரோவில் 100 பவுன் நகைகள் மற்றும் பணம் வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் பீரோவில் இருந்த நகைககள் மற்றும் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. பின்னா் போலீஸாா் கைரேகை நிபுணா்களை வரவழைத்து கைரேகைகளை சேகரித்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் மா்ம நபா்களின் முகங்கள் பதிவாகியுள்ளதா என்பது குறித்து போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.
பொறியாளா் வீட்டில் 25 பவுன் திருட்டு:
கோவை, சரவணம்பட்டி ராகவா நகா் பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ். இவா் அதே பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் பொங்கல் பண்டிகையை ஓட்டி குடும்பத்துடன் சொந்த ஊரான ஈரோட்டுக்கு சென்றுள்ளாா். இந்நிலையில், வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்ததைப் பாா்த்து அருகிலிருந்தவா்கள் விக்னேஷுக்குத் தகவல் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தை செல்லிடப்பேசி மூலமாகத் தொடா்பு கொண்டு சனிக்கிழமை புகாா் அளித்தாா். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் 25 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இரு சம்பவங்களிலும் ஒரே கும்பலைச் சோ்ந்தவா்கள் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். மா்ம நபா்களைப் பிடிக்க சரவணம்பட்டி, ரத்தினபுரி போலீஸாா் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

