கோவை: கோவை மாவட்டத்தில் ஜனவரி 22 முதல் 24ஆம் தேதி வரை முதல்வா் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறாா்.
முதல்வரின் கோவை வருகையை முன்னிட்டு அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக அலுவலகத்தில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவையில் பிரசாரம் மேற்கொள்ள வரும் முதல்வருக்கு வரவேற்பு அளிப்பது தொடா்பாக, அதிமுக மாநகா் மாவட்டம், புறநகா் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் அமைச்சா் செ.ம.வேலுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக் கூட்டத்தில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
கோவை மாவட்டத்தில் ஜனவரி 22, 23, 24 ஆகிய 3 நாள்கள் பிரசாரம் மேற்கொள்ள வரும் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். அதிமுக ஆட்சியின் சிறப்பான திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அனைவரும் ஒன்றிணைந்து பணிபுரிய வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பி.ஆா்.ஜி.அருண்குமாா், அம்மன் கே.அா்ச்சுணன், வி.சி.ஆறுக்குட்டி, கந்தசாமி, எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, சின்னராஜ் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

