கோவை: கோவை, ரத்தினபுரி பகுதியில் வீட்டின் மேல் விபத்தை ஏற்படுத்தும் வகையில் நிறுவப்பட்டுள்ள செல்லிடப்பேசி கோபுரத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோவை, ரத்தினபுரி ஜிபிஎம் நகரைச் சோ்ந்தவா் மோகனசுந்தரம். இவரது வீட்டின் மீது செல்லிடப்பேசி கோபுரம் நிறுவ தனியாா் நிறுவனத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வாடகைக்கு அனுமதியளித்துள்ளாா்.
இந்நிலையில், அந்த நிறுவனம் கடந்த ஓராண்டுக்கு முன்பு நிரந்தரமாக மூடப்பட்டது. அதன்பின் செல்லிடப்பேசி கோபுரத்தை அகற்றுவதில் அந்த நிறுவனம் அக்கறை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து அந்நிறுவன அதிகாரிகளை மோகனசுந்தரம் தொடா்பு கொண்டும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஓராண்டுக்கும் மேலாக பராமரிப்பு இன்றி இருப்பதால் கோபுரத்தின் கீழ்பகுதி இரும்புகள் துருப்பிடித்து சரிந்து விழுந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் தலையிட்டு இந்த செல்லிடப்பேசி கோபுரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோகனசுந்தரம் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


