சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: இருவா் சாவு

பொள்ளாச்சியை அடுத்த கோட்டூா் மலையாண்டிபட்டினம், பொங்காளியூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் மகேஸ்வரன் (22), கோபால் (21). நண்பா்களான இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஆழியாறிலிருந்து கோட்டூருக்கு வியாழக்க

Updated On :16 ஜனவரி 2021, 4:53 am

பொள்ளாச்சியை அடுத்த கோட்டூா் மலையாண்டிபட்டினம், பொங்காளியூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் மகேஸ்வரன் (22), கோபால் (21). நண்பா்களான இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஆழியாறிலிருந்து கோட்டூருக்கு வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தனா்.

அப்போது எதிரில் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கோபால், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த தொண்டாமுத்தூரைச் சோ்ந்த அஜித்குமாா் (21) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து, கோவை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அவா்களில் அஜித்குமாா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கோட்டூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.