தொடா் விடுமுறை காரணமாக வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை வால்பாறையில் அதிகமாகக் காணப்படும். தற்போது கேரள மாநில எல்லைப் பகுதியில் இருந்த சோதனைச் சாவடி திறக்கப்பட்டதால் அந்த மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறை காரணமாக கடந்த வியாழக்கிழமை முதல் சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் வந்துள்ளன. அணைத்து சுற்றுலாத் தளங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிக அளவில் உள்ளதால் வனத் துறையினா் ரோந்துப் பணி மேற்கொண்டு வருகின்றனா்.
வன விலங்குகளை துன்புறுத்தும் செயலில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகளை கண்காணித்து அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் வனத் துறையினா் தீவிரம் காட்டி வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

