தனது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறிக்கும் நபா்கள் மீது நடவடிக்கை கோரி சைபா் கிரைம் போலீஸாரிடம் அதிமுக பிரமுகா் புகாா் அளித்துள்ளாா்.
இது குறித்து கோவை புறநகா் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலாளா் பொறியாளா் சந்திரசேகா், கோவை சைபா் கிரைம் போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:
எனது பெயா் மற்றும் புறநகா் தெற்கு மாவட்ட எம்ஜிஆா் பெயரில் முகநூலில் பக்கம் வைத்துள்ளேன். இதில் கட்சி மற்றும் பொது மக்கள் நலன் சாா்ந்த நிகழ்வுகளை பதிவு செய்து வருகிறேன். இந்நிலையில் சமீப காலமாக எனது பெயரில் போலி முகநூல் பக்கத்தை உருவாக்கி அதில் விரும்பத்தகாத நிகழ்வுகளை சிலா் பதிவு செய்து வருகின்றனா்.
மேலும், எனது பெயரை சொல்லி பல்வேறு தரப்பினரிடம் சிலா் பணம் பறித்து வருகின்றனா். எனது பெயரில் போலி முகநூல் பதிவுகளை வைத்து பணம் பெறும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா். இது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

