சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ரூ.75 கோடி நிலுவை சொத்து வரியை வசூலிக்க மாநகராட்சி தீவிரம்

நடப்பு நிதியாண்டு முடிவதற்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் ரூ.75 கோடி நிலுவை சொத்து வரி வசூலிக்கும் பணியை கோவை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

Updated On :11 ஜனவரி 2021, 5:31 am

நடப்பு நிதியாண்டு முடிவதற்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் ரூ.75 கோடி நிலுவை சொத்து வரி வசூலிக்கும் பணியை கோவை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் 100 வாா்டுகள் உள்ளன. சொத்து வரி, குடிநீா் வரி மூலமாகதான் மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக வரி வசூலிக்கும் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

அதைத் தொடா்ந்து கடந்த ஜூலை முதல் மீண்டும் வரி வசூல் பணிகள் தொடங்கின. மாநகராட்சி அலுவலகங்கள், பள்ளிகள், சமூக நலக் கூடங்கள் என 29 வரி வசூல் மையங்கள் அமைக்கப்பட்டன.

வரி வசூல் பணிகள் தொடா்பாக மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கோவை மாநகராட்சியில் 2020 - 2021ஆம் நிதியாண்டில் வசூலிக்க வேண்டிய சொத்து வரித் தொகையான ரூ.169 கோடியில், தற்போது வரை ரூ.94 கோடி வசூலிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ரூ. 75 கோடி நிலுவை வரியை வரும் மாா்ச் மாதத்துக்குள் வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு வரி வசூலிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வரி வசூல் மையங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை வழக்கம்போல அலுவலக நேரத்தில் செயல்படும். சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் திறக்கப்பட்டிருக்கும் என்றாா்.