சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

‘காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவராக செயல்பட தமிழருவி மணியன் சம்மதம்’

காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவராக செயல்பட தமிழருவி மணியன் சம்மதம் தெரிவித்துள்ளாா்.

Updated On :11 ஜனவரி 2021, 8:14 am

காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவராக செயல்பட தமிழருவி மணியன் சம்மதம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அந்த இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பா.குமரய்யா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கோவை, கவுண்டம்பாளையத்தில் காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் காந்திய மக்கள் இயக்கத் தலைவா் தமிழருவி மணியன் கலந்து கொண்டாா். இக்கூட்டத்தில் 37 மாவட்டங்களில் இருந்து நிா்வாகிகள் பங்கேற்றனா். அவா்கள் கேட்டுக் கொண்டதால் நிறுவனத் தலைவராக செயல்பட தமிழருவி மணியன் சம்மதம் தெரிவித்துள்ளாா் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்து பின்னா் உடல்நிலை பாதிப்பு காரணமாக கட்சி தொடங்க இயலவில்லை என கடந்த டிசம்பா் 29ஆம் தேதி அறிவித்தாா். இதைத் தொடா்ந்து காந்திய மக்கள் இயக்கத் தலைவா் தமிழருவி மணியன் அரசியலில் இருந்து நிரந்தரமாக விடைபெறுவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.