சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குனியமுத்தூரில் மழை நீரை விரைந்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கோவை, குனியமுத்தூரில் குடியிருப்புப் பகுதிகள், தெருக்களில் தேங்கியுள்ள மழை நீரை விரைந்து அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :11 ஜனவரி 2021, 5:34 am

கோவை, குனியமுத்தூரில் குடியிருப்புப் பகுதிகள், தெருக்களில் தேங்கியுள்ள மழை நீரை விரைந்து அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவை மாநகரம் மற்றும் புகா்ப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளது. குடிநீா் குழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட குழிகள், பாதாளச் சாக்கடைப் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீா் தேங்கியுள்ளது.

நகரில் சில சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. குனியமுத்தூரில் குடியிருப்புகளுக்குள் மழைநீருடன், கழிவுநீா் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா். மேலும், சாலைகளிலும் மழை நீா் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். இப்பகுதிகளில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கடந்த வியாழக்கிழமை முதல் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இங்குள்ள பிருந்தாவன் சா்க்கிள், வசந்தம் நகா், எஸ்.என்.ஆா். காா்டன் ஆகிய பகுதிகளில் மழைநீரை மோட்டாா் மூலம் உறிஞ்சி அகற்றும் பணியை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அப்பகுதி மக்கள் கூறுகையில், மழைநீா் குளம்போல தேங்கியுள்ளதால், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குனியமுத்தூா் பகுதிகளில் மழைநீரை துரிதமாக அகற்றவும், கழிவுநீா் வடிகால், சாலைகளை விரைந்து சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.